2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பூசாரியின் தீர்த்தத்தை குடித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Freelancer   / 2025 ஜூலை 01 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுச் சொல்லும் ஆலயம் ஒன்றில் பூசாரியினால் வழங்கப்பட்ட தீர்த்தத்தை குடித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அராலி மேற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ஜசிந்தன் (வயது 31) என்பவராவார்.

மேற்படி குடும்பஸ்தர் கடந்த 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சலவாசலில் குத்து ஏற்பட்டதாக தெரிவித்து மூளாய் கூட்டுறவு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
 பின்னர் ஆராலி மத்தியில் உள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் அவருக்கு தடை இருப்பதாக தெரிவிக்கப்பட்டு தடை வெட்டிய பின்னர்  பூசாரியினால் வழங்கப்பட்ட தீர்த்தத்தினை குடித்த போது அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
 
இம் மரணம் தொடர்பில் யாழ்.  மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார்.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X