2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பசிலுக்கு இன்று “பிஸி டே”

J.A. George   / 2021 ஜூலை 08 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசில் ராஜபக்ஷ முக்கியமான அமைச்சரவை அமைச்சு பொறுப்புடன் மீண்டும் பாராளுமன்றத்திற்குள் நுழைவதால் இன்று அவருக்கு வேலைப்பளுவுடன் கூடிய பரபரபான நாளாக இருக்கும்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  முன்னிலையில், நிதியமைச்சராக  பசில் பதவியேற்பார் என்று அறிய முடிகின்றது.

அதன்பின்னர் அவர் பாராளுமன்றத்திற்குச் செல்வார், அங்கு  சபாநாயாகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் தேசியப் பட்டியல் எம்.பி. யாக பதவியேற்பார்.

பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பாராளுமன்றத்தில் உள்ள அவரது அறையில் மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ளார்.

பின்னர் நிதி அமைச்சகத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வார் என அறியமுடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X