2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

படைகளிலிருந்து தப்பியவர்களுக்கு பொதுமன்னிப்பு

George   / 2016 ஜூன் 07 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மேனகா மூக்காண்டி, ஜே.ஏ.ஜோர்ஜ்

பாதுகாப்பு படைகளில் இருந்து தப்பிச்சென்ற, முறையான விடுமுறை எடுக்காமல் வீடுகளுக்குச் சென்று சேவைக்கு திரும்பாத வீரர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதிமுதல் 21ஆம் திகதி வரை இந்த பொதுமன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக முப்படைகளும் அறிவித்துள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து முப்படைகளின் உயரதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

இதன்படி, 6 மாதங்களுக்கு மேல் கடமைக்கு சமூகமளிக்காதவர்கள் இந்த பொதுமன்னிப்பு காலத்தில் சரணடைந்து தண்டனையின்றி படைகளிலிருந்து விலகவோ, விரும்பினால் சேவையை தொடரவோ முடியும்.

2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர், படைகளில் இருந்து தப்பிச்சென்றவர்கள் மற்றுறும் விடுமுறையின்றி வீட்டில் உள்ளவர்கள் வந்து பொதுமன்னிப்பு பெறமுடியும்.

இந்த 6 மாத கால வரையறை, இராணுவம் மற்றும் விமானப்படைகளுக்கு பொருந்தும் என்பதுடன் கடற்படையிலிருந்து தப்பிச்சென்று 3 மாதங்கள் கடமைக்கு சமூகமளிக்காதவர்கள் பொதுமன்னிப்பு பெறமுடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .