2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

படைமுகாமின் பாதுகாப்பு வீழ்ச்சியால் மஹிந்தவுக்கு அதிர்ச்சி

Thipaan   / 2016 ஜூன் 07 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாலாவ போன்ற முகாமொன்றின் பாதுகாப்பு வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பில் தான் ஆச்சரியப்படுவதாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, யுத்த காலத்தின் போது, இவ்வாறான சம்பவமொன்று ஏற்பட்டிருந்தால், யுத்தத்தை நிறுத்தவேண்டி ஏற்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மேற்படி இராணுவ முகாமில் ஏற்பட்ட அழிவு தொடர்பில் நடத்தப்படும் விசாரணையின் போது, பாதுகாப்புப் படையினரின் நிலைமை எவ்வாறுள்ளது என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்படல் வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், நேற்று செவ்வாய்க்கிழமை (07), அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மேற்படி முகாமிலிருந்த ஆயுதக் களஞ்சியசாலை வெடித்தமையானது, முழு நாட்டுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உயிரிழந்த இராணுவ வீரர் தொடர்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, காயமடைந்தவர்கள், விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

மேற்படி விபத்து ஏற்பட்டமைக்கான காரணம், இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்றுவரும் சம்பவங்களை நோக்குமிடத்து,  இராணுவத்தினரின் தன்னம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளமை வருத்தத்துக்குரியது' என்றும் மஹிந்த ராஜபக்ஷ, தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .