2025 நவம்பர் 27, வியாழக்கிழமை

படகு கவிழ்ந்ததில் இளைஞர் பலி

R.Tharaniya   / 2025 நவம்பர் 27 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி பாலக்குடா களப்பில் படகு கவிழ்ந்து இளைஞர் ஒருவர் புதன்கிழமை (26) அன்று உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் பாலக்குடா சோத்துப்பிட்டு வாடிய பகுதியைச் சேர்ந்த ஹேரத் முதியன்சேலாகே ஜூட் கிருஷாந்த சவிந்த (வயது 22) ஆவார். ஒரு படகு இயந்திரம் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் பழுது பார்க்கப்பட்ட இயந்திரத்தை படகில் பொருத்தி சோதிக்க நடவடிக்கை எடுத்தபோது பாலக்குடா களப்பில் படகு கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களப்பில் மூழ்கிய இளைஞர் உள்ளூர்வாசிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கற்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.யூ.எம்.சனூன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X