Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வருவதற்கு முயன்ற பெண்கள் உள்பட 6 அகதிகளை தமிழகத்தின் கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.
தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு 2 பெண்கள் உள்பட 6 பேர் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கியூ பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 6 பேரிடம் விசாரித்தனர்.
அப்போது அவர்கள், திருகோணமலையை சேர்ந்த சுதாகர் (வயது40). அவரது மனைவி சந்திரமதி (36), மகன் ஹரிஸ்கரன் (10), உதயகுமார் (40) மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சதீஷன் (42), அவரது மனைவி திலக்சனா (31) என்பது தெரியவந்தது.
கடந்த 2013ஆம் ஆண்டில் அகதிகளாக வந்த இவர்கள் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் தங்கி இருந்த நிலையில், தற்போது இலங்கை திரும்ப முடிவு செய்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தரகரை அணுகி உள்ளனர்.
அந்த தரகரின் வாக்குறுதியின்பேரில், சட்டவிரோதமாக படகுமூலம் இலங்கை செல்வதற்காக தனுஷ்கோடி கடல் பகுதிக்கு வந்த நிலையில், படகு வர தாமதமானதால் 6 பேரும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
6 பேரையும் கைது செய்த பொலிஸார் தனுஷ்கோடி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago