Freelancer / 2026 ஜனவரி 03 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணங்க, 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணையைத் திருத்துதல் மற்றும் கல்விசார் ஊழியர்களை பயன்படுத்துதல் தொடர்பான புதிய வழிகாட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் பாடசாலை நிறைவடையும் நேரத்தை பி.ப. 2.00 மணி வரை நீடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், தற்போது நிலவும் இயற்கை அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2026 ஆம் ஆண்டிலும் பாடசாலை நேரம் காலை 7.30 முதல் பி.ப. 1.30 வரை தற்போதுள்ளவாறே தொடரும்.
தரம் 1 மற்றும் தரம் 6 தவிர மற்றைய அனைத்துத் தரங்கள்:
2026 ஆம் ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணை ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பமாகும்.
தரம் 6: கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகும்.
தரம் 1: கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகும்.
புதிய சீர்திருத்தங்களின் கீழ் பாடப்பரப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக, 2026 ஆம் ஆண்டின் முதலாம் தவணைப் பரீட்சையை நடத்தாமல், அந்த நேரத்தைக் கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (a)
21 minute ago
29 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago
59 minute ago
2 hours ago