2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

’படுகொலை வழக்குகளின் தரவுகள் கிடையாது’

Freelancer   / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015  முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் மற்றும் படு கொலைகள் தொடர்பில் அரசியல்வாதிகள், அரச அலுவலர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் 2022-2024 காலப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் எவ்வித தரவுகளும் கிடையாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (06)  அன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில்  ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.முஜிபுர் ரஹ்மான், மேலே குறிப்பிட்ட காரணங்களுக்காக 2022-2024 காலப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை? அவற்றில் இன்றளவில் நிறைவடைந்துள்ள வழக்கு விசாரணைகளின்  எண்ணிக்கை?, அவ்வழக்குகள் யாவை/ வழக்குகளில் சட்டத்துறை தலைமையதிபதியினால் மீளப்பெறப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை என்பது தொடர்பில் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,  2022-2024 காலப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் எவ்வித தரவுகளும் கிடையாது. அதனால் முன்வைக்கப்பட்ட இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது.  

சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்படும் போது அரசியல்வாதிகள், அரச அலுவலர்கள் என்று வகைப்படுத்தப்படுவதில்லை. அது தவறானது. பொதுவான நிரல்படுத்தலே குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X