2025 மே 01, வியாழக்கிழமை

பட்​ஜெட்டில் நிவாரணம் கிடைக்காது: அடித்து கூறுகின்றார் தயாசிறி

Editorial   / 2021 நவம்பர் 07 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் பெரிய எதிர்ப்பார்ப்புகள் இல்லையெனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமென தான் எதிர்ப்பார்க்கின்றேன் என்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் தொகுதிக் கூடத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “ இந்த வரவு- செலவுத்திட்டத்தில் பாரிய நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது” என்றார்.

வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கப்படும் என்பது ஏமாற்று நடவடிக்கையாகும். அதனூடாக எந்தவொரு நிவாரணத்தையும் எதிர்பார்க்கமுடியாது என்றார்.

பட்ஜெட் என்பது நத்தார் தினத்தன்று வரும் நத்தார் தாத்தா வழங்கும் சீனிபோல மாதிரியானது என மக்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அது முற்றிலும் தவறானதாகும். மக்களின் அவ்வாறான தவறான சிந்தனைகளால்தான், நாடு இவ்வளவு மோசமான நிலைமையை எதிர்நோக்கியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .