Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் மாவட்டத்தின், கல்னேவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட,வெடகொலுவாகம மற்றும் ஹபரவத்த ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, 120 குடும்பங்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகளின்றி மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனரென தெரிவிக்கப்படுகிறது.
தாம் உரிய முறையில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ளதாகவும், மழை நீரை மாத்திரம் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், இந் நிலைமை காரணமாக உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்னறனர்.
உரிய காலத்துக்கு மழை பெய்யாதமையின் காரணமாக நீண்டகாலமாக இவ்வாறான பாதிப்புகளை எதிர்நோக்கி வந்துள்ளதாகவும், தற்போது மழை பெய்கின்ற போதிலும் பயிர் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமளவுக்கு பொருளாதார வசதி தமக்கு இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த கிராமங்களைச் சேர்ந்த சில குடும்பங்களைத் தவிற பெரும்பாலானோர் வீடு வசதிகளின்றியும், அடிப்படை வசதிகளின்றியும் உள்ளனர். இவர்கள் தற்காலிக வீடுகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனரென தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பட்டினியில் கிடந்து தமது பிள்ளைகள் கல்வி கற்பதற்காக பெற்றோர் முயற்சிக்கின்றனர் எனவும், இவர்கள் ஒருவேளை உணவை மாத்திரம் உட்கொள்கின்றனரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கிராமங்களுக்கு செல்லும் வீதிகளும் செப்பனிடப்படாத நிலையிலேயே காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களின் வறுமை நிலை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும், உண்பதற்கு உலர் உணவுகளையேனும் தந்துதவுமாறு அம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago