Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.நிரோஷினி
“முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மறைந்தப் பின்னரும் அவரது பெயர் சர்வதேச ரீதியிலும் மக்கள் மத்தியிலும் நிலைத்து நிற்கின்றது என்றால், அது அவரது அரசியல் சாணக்கியத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. இன்று இந்நாடு வளம் பெற்று இருக்கின்றது என்றால், அது பண்டாரநாயக்கவின் குடும்பத்தினரின் பங்களிப்பும் உள்ளடங்குகின்றது என்பதை இத்தருணத்தில் கூறுகின்றேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் 100ஆவது ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அம்மையார் பிரதமராக பதவியேற்ற காலம் தொட்டு இந்நாட்டுக்கு அரும் பெரும் சேவையை வழங்கினார். அவர் எமக்கு முன்மாதிரியாக திகழ்கின்றார். வெளிநாடுகளில் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் என்று அன்றைய காலக்கட்டத்தில் நிலைகொண்டிருந்தபோதும் இலங்கையில் அவ்வாறானதொரு நிலை இருக்கவில்லை. இந்நிலையில், தனது திறமையால் பெண்களும் சாதிக்கலாம் என்ற நிலைப்பாட்டை உருவாக்கினார்.
கச்சத்தீவு விவகாரம் முதல் நாடாளுமன்றத்தில் 78ஆம் திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடியமை முதல் அம்மையார் மக்களுக்காக செய்த சேவை வெளிகாட்டி நிற்கின்றன.
அவரது சேவை எவராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .