Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 மே 06 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டு செல்லும் பணிப்பெண்களுக்குத் தேவையான கட்டாய வேலை பயிற்சியை முடிக்காமல் பணிப்பெண்களை முதல் முறையாக வெளி நாடுகளுக்கு அனுப்பி சுமார் 250 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் உட்பட 6 பேரின் சேவைகள் திங்கட்கிழமை (05) முதல் உடனடியாக இடைநிறுத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடத்திய விசாரணையில், 2022 முதல் 2024 ஓகஸ்ட் வரை, வீட்டுப் பணிப்பாளர்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் போது முடிக்க வேண்டிய கட்டாய வேலை பயிற்சியிலிருந்து கிட்டத்தட்ட 35,000 பெண்களுக்கு மோசடியாக விலக்கு அளிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மிகப்பெரிய நிதி மோசடியை, முன்னர் வெளிநாட்டு வேலைக்குச் செல்லாத பெண்களும், வெளிநாட்டு வேலைக்குச் சென்ற அனுபவம் உள்ளதாகச் சான்றளிக்கும் போலி ஆவணங்களை தயாரிக்கப்பட்டுள்ளன, இதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு லட்சம் முதல் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
மோசடி தொடர்பாக கிடைத்த தகவல்களின்படி, பயிற்சி இல்லாமல் வீட்டு வேலைக்கு வெளிநாடு செல்வதால், வேலையில் மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளை பெண்கள் எதிர்கொள்வதாக தகவல்கள் வந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பயிற்சி பெறாமல் வெளிநாடுகளுக்குச் சென்ற வீட்டுப் பணிப்பெண்கள், வெளிநாடுகளில் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக நேரிடும்.
அதன்படி, இந்த நிதி மோசடி மற்றும் முறைகேடு தொடர்பான அனைத்து தகவல்களும் லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மோசடி பற்றிய தகவல்கள் முதல் முறையாக ஊடகங்களால் வெளியிடப்பட்டதாகவும், பொது நிறுவனங்கள் குழுவிலும் இந்த விஷயம் எழுப்பப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசாரணையை தொடங்கி உள்ளதாகவும், அந்த விசாரணை தொடர்பாக, மேற்கண்ட அதிகாரிகளின் சேவைகள் இடைநீக்கம் செய்யப்பட்டு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
2 hours ago