2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள மாத்தறை- கொழும்பு தனியார் பஸ் சேவை

Editorial   / 2020 ஜூன் 02 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அதிகாரிகளால் மாத்தறை காலி வீதியில் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள், பாணந்துறை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாத்தறை- கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று (2) காலை தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


இதனால் காலி வீதியூடாக கொழும்புக்கு வரும் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


பஸ் சேவை பாணந்துறை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், பாணந்துறை பகுதியில் வைத்து தாம் பலரது அச்சுறுத்தல்களுக்கு இலக்காவதாகத் தெரிவித்தே, தாம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் மாத்தறை- கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .