2026 ஜனவரி 17, சனிக்கிழமை

பண்டாரவளை மண்சரிவு: ஆணொருவர் உயிரிழப்பு

Freelancer   / 2022 நவம்பர் 01 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஹகல்ல அம்பரவ பகுதியில் பெய்த கடும் மழையினால் மண்மேட்டுடன் கூடிய கொங்கிரீட் கட்டடம் வீட்டின் மீது சரிந்து வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஆண் ஒருவர், நேற்று (31) உயிரிழந்துள்ளார் என்று பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

டபிள்யூ.எம். ஜெயசேகர (73 வயது) என்பவரே உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,  அவர் தனது மனைவியுடன் வீட்டின் அறையில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென சுவர் இடிந்து விழுந்துள்ளது.

சம்பவத்தில் குறித்த நபரின் மனைவி தெய்வாதீனமாக காயங்களுடன் உயிர் தப்பி, தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சைகளை பெற்று வருகிறார்.

உயிரிழந்தவரின் சடலம் தியத்தலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X