Editorial / 2025 நவம்பர் 27 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருல்ஹுதாஉமர்
நாட்டில் சமீபத்திய கனமழைகாரணமாக வெள்ளநீர்வடிகால் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைந்தும் சிலஇடங்களில் அதிகரித்து வருகிறநிலையில், பலர்அந்தஇடங்களை நேரில்பார்க்க அலையலையாக திரள்வது அதிகாரிகளின் கடும்கவலையைஏற்படுத்தியுள்ளது.
மாவடிப்பள்ளி மற்றும் கிட்டங்கி போன்றபகுதிகளில் வெள்ளநீர்இன்னும் முழுமையாக சரிந்து விடாதநிலையில், நதிக்கரைகள், பாலத்தடைகள், ஆறுகரைகள்போன்றஇடங்களுக்கு மக்கள்மிகஅருகில் சென்றுபுகைப்படம் எடுப்பதும், வீடியோபதிவுசெய்வதும் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள், வெள்ளநீர் வடிந்தோடும் இத்தகைய இடங்களின் அடிப்பகுதியில் ஆழ்ந்தபள்ளங்கள் உருவாகியிருக்கலாம், மணல்வரடு தளர்ந்திருக்கலாம், திடீர்நீரோட்ட மாற்றங்கள் ஏற்படலாம் என்பதால் பொதுமக்களுக்கு அபாயம்உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்,சிலர்குடும்ப சகிதம்வாகனங்களுடன் வெள்ளப்பாதைகளுக்கு நெருக்கமாக செல்வதும், ஆற்றங்கரையில் நிற்கும் பாதைகளில் தங்குவதும் சறுக்கி விழும்அபாயத்தை அதிகரிக்கிறது. சமூகஊடகங்களில் பதிவிடும் முயற்சியால் ஆபத்தான பகுதிகளுக்கு செல்வது அபாயத்தை ஏற்படுத்தும் செயல்எனபாதுகாப்பு அதிகாரிகள் கண்டனம் தெரிவித்து அவற்றைபொருட்படுத்தாமல் மக்கள்சுற்றுலா பயணிகள் போலபடையெடுத்து வருகிறார்கள்.
வெள்ளநீர்வழிந்தோடும் எந்தப்பகுதியிலும் தேவையற்றுச் செல்லவேண்டாம் என்றும் ஆறு/ஏரி கரைகள், உடைந்ததடைகள்,பாலங்களின் அருகில் நின்றுபுகைப்படம் எடுப்பதைத் தவிர்க்குமாறும், குழந்தைகளை இத்தகைய பகுதிகளுக்கு அழைத்துச் செல்லாமல் இருக்குமாறும், அதிகாரிகள் வெளியிடும் எச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும், பொதுமக்கள் தேவையற்ற கூட்டநெரிசலை தவிர்த்து, பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி செயல்படுமாறு மக்களைபாதுகாப்பு படைகேட்டுக்கொண்டுள்ளது.
7 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
58 minute ago
1 hours ago