Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2025 மே 04 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாரஇறுதி விடுமுறையை கழிப்பதற்காக, புதிதாக திருமணமான ஜோடி உட்பட உறவினர்கள் சிலர், கழிமுகத்தில்குளித்துக் கொண்டிருந்த போது, மணப்பெண் நீரில் மாயமாகிவிட்டார்.அவரை காப்பாற்றுவதற்காக கழிமுகத்தில் குதித்த சித்தப்பா மரணமடைந்துள்ளார் என வனாத்துவில்லுவபொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல்போன மணமகளின் சித்தப்பாவான எம். ஃபரீன் (42) என்பவரே மரணமடைந்துள்ளார். நீரில் மூழ்கி காணாமல் போன புதிய மணப்பெண்ணான அப்சானா(22) இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் கூறுகின்றனர்.
மன்னார், கற்பிட்டி, வன்னி, முந்தலம், முகம்மதியா புரம் கிராமத்திற்கு தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் சமீபத்தில் அழைத்து வரப்பட்ட 22 வயதான அப்சானா, கற்பிட்டி களப்பு வழியாக ஒரு டிங்கி படகில் கங்கை வாடியா கழிமுகத்தில் குளிக்கச் சென்றிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
காணாமல் போன அப்சானாவைத் தேடும் பணிகளை கடற்படையின் விரைவு நடவடிக்கை பிரிவினர் தொடங்கியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago