2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புதிய அரசியலமைப்பே அடுத்த முன்னுரிமை

Freelancer   / 2022 ஜனவரி 25 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் அடுத்த முன்னுரிமை பணி என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில், நேற்று (24)  காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்னும் சில தினங்களில் இறுதி அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது என்று குறிப்பிட்டார்.

அதன் பின்னர் இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து புதிய அரசியலமைப்பை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அமைச்சரொருவர் மற்றொருவரின் நோக்கம் குறித்து பகிரங்கமாக விமர்சிப்பது முறையான ஆட்சிக்கு உரிய நடவடிக்கை அல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், கூட்டுப் பொறுப்பு என்பது அனைத்து அரசாங்க முடிவுகளுக்கும் அரசாங்க அமைச்சர்களும் பங்குதாரர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
.
நாளை அல்லது நாளை மறுநாள் தேர்தல் என்று சிலர் கூறுகின்றனர். அடுத்த 03 வருடங்களை சரியான முறையில் பயன்படுத்தி, நேர்மையான நடவடிக்கையை நோக்கி பயணிக்கிறோம் என தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபீட்சம் நோக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அந்த மூன்று வருடங்களில் எமக்கு போதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

எனவே நாம் இப்போது செய்ய வேண்டியது அடுத்த 03 வருடங்களை ஒரு கூட்டு அர்ப்பணிப்புடன் பயன்படுத்துவதே ஆகும் எனவும் இந்த நோக்கத்திற்காக நம் அனைவரையும் அர்ப்பணிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .