2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

புதிய அலை கலை வட்டத்தின் மூன்றாவது ஹைக்கூ கவியரங்கம்

Editorial   / 2025 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதாந்தம்  நடத்தும் ஹைக்கூ  கவியரங்கம்  கொழும்பு-13,புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (31 ஆம் திகதி) மாலை 3.30  மணிக்கு நடைபெறவுள்ளது.

இக் கவியரங்கிற்கு தலைமையை ஏற்கிறார் உளவியல் மற்றும் உளவளத் துணை விஞ்ஞான மாணி  பட்டபடிப்பு  மாணவியும் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் செயலாளருமான  திருமதி  பிரியதர்ஷினி விக்கினேஸ்வரன்.

திறந்த  நிகழ்வாக நடைபெறவுள்ள இந்த அமர்வில்  கலந்துகொண்டு  தமது கவித்திறமைகளை வெளிக்கொணர விரும்புவோர் அன்றைய தினம்  நேரில் கலந்து கொள்ள முடியும். மேலதிக  விபரங்களை பெற 075 4880172 என்ற அலைபேசி மற்றும் வாஸ்ட்அப்  உடன் தொடர்பு கொள்ளலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .