2024 மே 03, வெள்ளிக்கிழமை

’புதிய சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லலாம்’

Freelancer   / 2024 ஏப்ரல் 20 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய மின்சார சட்டமூலத்திற்கு எதிராக எவரும் நீதிமன்றத்தை நாட முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மின் கட்டணத்தை குறைப்பதே புதிய மின்சார சட்டமூலத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கான இரண்டு வழிமுறைகளில் இரண்டாவதான நிர்வாகச் செலவைக் குறைப்பதனையே தற்போது மேற்கொள்ளவுள்ளோம் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன் முதலாவது வழிமுறையான மின்னுற்பத்தி செலவைக் குறைப்பதற்கு, எரிபொருளில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு பதிலாக மீள்புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திட்டங்களை எதிர்காலத்தில் கொண்டுவரவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .