2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புதிய தூதுவர்கள் பிரதமரைச் சந்தித்தனர்

Editorial   / 2025 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகப் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் குழு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) சந்தித்தனர்.

இந்தக் குழுவில் இந்தோனேசியாவிற்கான தூதுவர் திருமதி எஸ்.எஸ். பிரேமவர்தன, பிரேசிலுக்கான தூதுவர் திருமதி சி.ஏ.சி.ஐ. கொலொன்னே, மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர்  எம்.ஆர். ஹசன், துருக்கிக்கான தூதுவர்  எல்.ஆர்.எம்.என்.பி.ஜி.பி.பி. கதுருகமுவ, நேபாளத்திற்கான தூதுவர் திருமதி ருவந்தி தெல்பிட்டிய, கொரியக் குடியரசுக்கான தூதுவர்  எம்.கே. பத்மநாதன் மற்றும் ஓமான் சுல்தானகத்திற்கான தூதுவர் திரு. டபிள்யூ.ஏ.கே.எஸ். டி அல்விஸ் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

இலங்கையுடனான நல்லுறவை மேம்படுத்துதல், சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயரை உயர்த்துதல், மற்றும் தரமான முதலீடுகளை ஈர்த்தல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, பிரதமர் புதிய தூதுவர் குழுவினருக்குச் சுட்டிக்காட்டினார்.

அவர்கள் பொறுப்பேற்க இருக்கும் நாடுகளில் காணப்படும் வாய்ப்புகள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட பிரதமர், அவர்களின் எதிர்காலப் பணிகளுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர்   பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X