2024 மே 20, திங்கட்கிழமை

புதிய நல்லிணக்க குழு தேர்தலை நோக்கியதா?

Freelancer   / 2024 மே 09 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று புதிதாக மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றது இதனை முற்று முழுதாக நாம் எதிர்க்கின்றோம் எனத் தெரிவித்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  தலைவரும், வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் இது  தேர்தலை நோக்கியதா என்ற கேள்வி எழுகின்றது என்றார். 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) இடம்பெற்ற இராஜதந்திர சிறப்புரிமை   மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,  

நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்க வெளிவிவகார அமைச்சர் எடுக்கும் முயற்சி சரியாக இருக்குமா என்ற விடயம் ஒருபுறம் இருந்தாலும் அதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. சண்டையிட்ட தரப்பே அது தொடர்பிலான விசாரணைகள் நடத்துவதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். சர்வதேச கண்காணிப்போடு இந்த விசாரணைகள் நடைபெற வேண்டும். இதனை நாம் ஏற்கனவே வலியுறுத்தியிருக்கின்றோம். அதனை அமைச்சர் கவனத்தில் எடுக்க வேண்டும். அப்போதுதான் ஒரு நியாயம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றார். .

அந்த வகையில் இந்த நல்லிணக்க ஆணைக்குழுவில் சர்வதேச கண்காணிப்பு  இருக்க வேண்டும்.அப்படி இருக்கின்றபோதுதான் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வரும். கடந்த காலங்களில் நல்லிணக்க ஆணைக்குழுக்கள் அமைக்கப்படட நிலையில் அவற்றை நம்பி எமது மக்கள் கருத்துக்களை சொன்னார்கள். இரகசியங்களை சொன்னார்கள். ஆனால் ஆணைக் குழுக்கள் கலைந்து போவதே இடம்பெற்று வந்தது.

இப்போது மீண்டும் புதிதாக நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று ஆரம்பிக்கப்படுகின்றது இதனை முற்று முழுதாக நாம் எதிர்க்கின்றோம்.இந்த நேரத்தில் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படுவது தேர்தலை நோக்கியதா என்ற கேள்வி எழுகின்றது.இந்த ஆணைக்குழுவில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இல்லை என்றால் இது கானல் நீராகவே இருக்கும்  இதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருக்கவே இருக்காது என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X