2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பதவி விலகினார் ஹர்ஷ

Editorial   / 2020 மார்ச் 18 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 

ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவில் ​இன்று (18) அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து தனது தீர்மானத்தை அறிவித்ததாகவும் தெரிவித்தார். 

தான பதவி விலகுவதை அவர் விரும்பவில்லை என்றும், தன்னை பதவி விலக வேண்டாமென கோரிக்கை விடுத்தாகவும் தெரிவித்த அவர், அவருடன் தனக்கு தனிப்பட்ட முரணப்பாடுக​ள் எவையும் கிடையாதெனவும் தெரிவித்தார்.

இருப்பினும் தான் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட உள்ளதாலேயே மேற்படி தீர்மானத்தை எடுத்ததாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .