Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 04 , பி.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் மே 6 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள 24 மணித்தியால ஹர்த்தாலுக்கு அதிகாரிகள் பதிலளிக்கத் தவறினால், காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் ஹர்த்தாலை முன்னெடுக்க தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தீர்மானித்துள்ளது.
அன்றைய ஹர்த்தாலுக்கு செவிசாய்க்காவிடின், மே 11ஆம் திகதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் ஹர்த்தால் நடத்தப்படும் என்று நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
மக்கள் போராட்டம் ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், நிலவும் நெருக்கடிக்கு சாதகமான பதிலையும் நாடு எதிர்நோக்கி வரும் அழிவுகளை தடுக்கவும் தவறிவியுள்ளதாக ஜனாதிபதிக்கு அவர் நினைவூட்டினார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பது மற்றும் அவர்களின் தனிப்பட்ட நலன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, குறுகிய அரசியல் நலன்களுக்காக மக்களை அசௌகரியத்துக்கு உட்படுத்தும் நோக்கத்தில் எதிர்வரும் 06ஆம் திகதி நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் வேலை நிறுத்தத்துக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை என பல அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டள்ளது.
தமது சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று (3) இடம்பெற்ற சந்திப்பின் போதே தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
உத்தேசித்துள்ள வேலைநிறுத்தம், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அல்ல என்றும், பல அரசியல் கட்சிகளின் நலனுக்காகவே மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர் என்று ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago