2024 மே 03, வெள்ளிக்கிழமை

பந்தய காருக்கு பலியான சிறுமி (முழு விபரம்)

Mayu   / 2024 ஏப்ரல் 23 , பி.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எனது சிறிய சகோதரியின் வேண்டுகோளுக்கு இணங்க, எனது மாமாவும் எங்கள் தோட்டத்தைச் சேர்ந்த 27 பேரும் பஸ் பிடித்து தியத்தலாவில் கார் பந்தயம் பார்க்கச் சென்றனர்.

கார் பந்தயத்தைப் பார்ப்பதில் மிகுந்த விருப்பமுள்ள எங்கள் சிறிய சகோதரி, கார் பந்தயத்தின் போது எங்கள் மாமாவுடன் எங்களை விட்டுச் சென்றுவிட்டார் என உறவினர் சிவராஜ் கௌசல்யா (வயது 39) கூறினார்.

தியத்தலாவ நரியகந்தவில் இடம்பெற்ற “Foxhill Super Cross Race” கார் விபத்தில் ஏழு பேர பலியாகினர். 21 பேர் காயமடைந்தனர். அதில், ஏழுவயதான சிறுமியும் அடங்குவார்.  

சிவராஜ் கௌசல்யாவின் தாயாரின் சகோதரர் முத்துலிங்கம் உதயகுமார் மற்றும் முத்துலிங்கத்தின் மூத்த மகளின் மூன்றாவது குழந்தையான ஏழு வயது சிவகுமார் தினுஷிகா ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

டயரபாவத்தையைச் சேர்ந்த உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் திங்கட்கிழமை (22) தினுஷிகாவின் வீட்டில் ஒன்று கூடி தினுஷிகா மற்றும் தாத்தாவை இழந்த துயரத்தை வெளிப்படுத்தியும், தினுஷிகாவின் நினைவு தின நிகழ்வுகள் குறித்து பேசிக்கொண்டிருப்பதையும் காணமுடிந்தது.

நாங்கள் அங்கு சென்றபோதும் தினுஷிகாவின் தந்தை தியத்த​லாவைக்கு சென்று தினுஷிகா மற்றும் அவரது தாத்தா ஆகியோரின் சடலங்களை எடுத்து வருவதற்கு சென்றிருந்தார். எனினும், தினுஷிகாவின் சடலம் கிடைக்கவில்லை.

இந்த துயரம் குறித்து தினுஷிகாவின் உறவினர் சிவராஜ் கௌசல்யா கூறியதாவது:

எனது தாயாரின் சகோதரர் தோட்டத்தில் கூலி வேலை செய்யும் முத்துலிங்கம் உதயகுமார். இவரது மூத்த மகள் சில காலத்திற்கு முன்பு இறந்து விட்டார். அவரது மூன்றாவது குழந்தை 7 வயதான சிவகுமார் தினுஷிகா, அவர் தனது மகளுக்கு மிகவும் விருப்பம்  தினுஷிகாவிற்கு இரு சகோதரர்கள்  உள்ளனர். டயரபாவத்தை தோட்டப் பாடசாலையில் 2ஆம் ஆண்டில்  தினுஷிகா கல்வி பயின்று வருகின்றனர்.

எங்கள் சிறிய சகோதரி பாடசாலை வேலைகளை செய்வதில் அதிக விருப்பம்.   அவர் எப்போதும் பாடசாலை வேலைகளை முடித்துக்கொண்டு டி.வியில்,  கார் பந்தயம் மற்றும் கார்ட்டூன்களை  பார்ப்பார். தாத்தாவைப் போலவே அவளது தந்தையும் தினுஷிகாவை மிகவும் நேசித்தார், அம்மாவின் இழப்பை அவரது   உணர அவரது தந்தை அனுமதிக்கவில்லை. மகள் தினுஷிகா இல்லாமல் அவரது தந்தை எப்படி வாழ முடியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

டி.வி.யில் கார்  பந்தம் காட்டப்பட்டபோது, ​​அதைப் போய்ப் பார்க்க ஆசைப்பட்டார். இதை தனது தந்தை மற்றும் தாத்தாவிடம் சொன்னாள்  தினுஷிகா. இன்னும் சொல்லப்போனால் எங்கள் தோட்டத்தில் இருந்த ஒரு கூட்டம் அந்த சின்ன சகோதரியின் வேண்டுகோளுக்கு இணங்க கார் பந்தயம் பார்க்க பஸ்ஸில் சென்றது.

தோட்டத்தைச் சேர்ந்த தினுஷிகா உள்ளிட்டோர் அன்றையதினம்  காலையிலேயே  சென்றுள்ளனர். இவர்கள் பந்தயம் நடகும் திடலின் ஓரத்தில்   இருந்த நாற்காலிகளில் அமர்ந்திருப்பதாகவும் அங்கு சென்றவர்கள் தெரிவித்தனர்.

தாத்தாவின் மடியில்  தினுஷிகா அமர்ந்திருக்கிறாள். ஒரு கார் கவிழ்ந்து  தினுஷிகா அமர்ந்திருந்த நாற்காலியை தூக்கி வீசியதாக போட்டியை பார்க்க சென்றவர்கள் தெரிவித்தனர். அந்தச் சமயத்தில்  தினுஷிகா என்ன உணர்ந்தாள் என்று தெரியவில்லை.

 போய் வருவோம் என்று கடைசியில் சொன்னாள். ஆனால்,  தினுஷிகாவும் மாமாவும் இனி எங்கள் வீட்டுக்கு வர மாட்டார்கள்.   இனி டி.வி பார்க்க எங்கள் வீட்டுக்கு வர மாட்டார். கார் பந்தயங்களைப் பார்ப்பது அவருக்குப் பிடித்திருந்தது. என்று சிவராஜ் கௌசல்யா தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .