Editorial / 2026 பெப்ரவரி 26 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்டகாலமாகப் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த 'பம்போ' எனும் போதைப்பொருள் வியாபாரி, பெருமளவு ஹெரோயினுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர் குணவர்தனவிற்கு (73734) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு, தொட்டலங்க பகுதியில் இருந்து தனியார் பேருந்து மூலம் அம்பாறைக்கு ஹெரோயின் கடத்தி வரப்படுவதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, வௌ்ளிக்கிழமை (26) அதிகாலை குறித்த பேருந்தை வழிமறித்துச் சோதனையிட்ட போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2,677 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மிஹிதுபுர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மிகவும் தந்திரமான முறையில் பொலிஸாரை ஏமாற்றி நீண்டகாலமாக இந்தக் கடத்தல் தொழிலை முன்னெடுத்து வந்துள்ளார். இவரைப் பிடிக்கப் பொலிஸார் பலமுறை முயற்சித்த போதிலும், ஒவ்வொரு முறையும் அவர் தப்பித்து வந்துள்ளார். தற்போது சிக்கியுள்ள இவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அம்பாறை நகரின் மிஹிதுபுர, நவகம்புர, கல்மடுவ மற்றும் உதயபுர ஆகிய பகுதிகளுக்கு இவர் பிரதானமாகப் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்ததாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago