Editorial / 2026 மே 04 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி. கபில
விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் மறைந்திருந்த போதே, இன்று (04) பிற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட 50 பேரில் 48 பேர் வியட்நாம் நாட்டவர்கள் எனவும், ஏனைய இருவர் சீன நாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 33 பேர் ஆண்கள், ஏனைய 17 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் அனைவரும் 20 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜவின் ஆலோசனையின் பேரில், விசாரணை மற்றும் செயல்பாட்டு கட்டுப்பாட்டாளர் விபுல் காரியவசத்தின் மேற்பார்வையில், சிரேஷ்ட அதிகாரி ஹரித பாடியப்பெரும உள்ளிட்ட குழுவினர் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது வெலிசர தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அவர்களை விரைவில் நாடுகடத்துவதற்கு (Deport) நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago