2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

பம்பரகலை பெரிய ராணிவத்த தோட்டத்தில் தீ: பலர் நிர்க்கதி

Freelancer   / 2023 ஜூலை 26 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், கௌசல்யா, ஆர்.ரமேஸ், பி.கேதீஸ்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேன பம்பரகலை தோட்ட பிரிவான பெரிய ராணிவத்த தோட்டத்தில் நேற்று இரவு 09 மணியலவில் தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட 24 தொடர் வீடுகளை கொண்ட இலக்கம் ஒன்று தொடர் விட்டு லயம் தீ பிடிக்கப்பட்டுள்ளது என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் வீடுகளில் வசித்தவர்களுக்கு உயிர் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார், இந்த பிரதேசத்தில் அதிகமாக காற்று வீசுவதால் தீயை கட்டுக்கு கொண்டுவர ஊர் மக்கள், உள்ளிட்ட பலர் போராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார ஒழுக்கு காரணமாக இந்த தீ பரவல் சம்பவம் இடம்பெற்றதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பத்து வீடுகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சொல்லப்படுகின்றது. அதேநேரத்தில் நிர்கதிக்கு உள்ளானவர்கள்  உறவினர்கள் வீடுகளிலும்,தோட்டத்தின் பொது இட கட்டடங்களிலும் பாதுக்காப்பு கருதி தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X