2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பம்பலப்பிட்டியில் சடலம் மீட்பு

Editorial   / 2018 டிசெம்பர் 27 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பம்பலப்பிட்டியில், அரச மாடிவீட்டுத் தொகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொரிவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.


பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விசாரணைகளை நடத்திய பொலிஸார், பூட்டியிருந்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போதே, சில நாள்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்தவரின் சடலத்தை நேற்றுக்காலை 10:30க்கு மீட்டுள்ளனர்.


சடலமாக மீட்கப்பட்டவர், 65 வயதான சதாசிவம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சவச்சாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .