Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 05 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சி.அமிர்தப்பிரியா
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது, பயங்கரவாதத்தை ஒழிக்கும் போர்வையில், சாதாரண மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் ஒரு சட்டமாகுமெனவும், இதற்குக் கீழே 106 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளரெனவும், முன்னிலை சோஷலிஸக் கட்சியின் செயலாளர் புபுது ஜாகொட, நேற்று (04) தெரிவித்தார்.
அத்தோடு, தற்பொழுது இலங்கையில் காணப்படும் அரசியல் கைதிகள் 106 பேரில், 35 பேர் தண்டனைகள் வழங்கப்பட்டு இருக்கின்றனர் எனவும், 42 பேர் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட வண்ணமுள்ளனர் என்பதோடு, 12 பேர், வழக்குகள் ஏதுமின்றி வருடக்கணக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், இச்சட்டத்தை ஒழிக்கும்படி, 1979ஆம் ஆண்டிலிருந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.
15 ஆண்டுகள் வரை, குற்றச்சாட்டுகளுக்கான வழக்குகள் எவையும் தாக்கல் செய்யப்படாமல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் பல கைதிகள் இருந்து வருகின்றனர் எனத் தெரிவித்த அவர், தற்பொழுது இருக்கும் அரசாங்கம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இல்லாது செய்வதைக் காட்டிலும், மரண தண்டனையை மீளக் கொண்டு வருவது தொடர்பில் மும்முரமாகச் செயற்பட்டு வருகிறது எனக் குற்றஞ்சாட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
22 minute ago