Editorial / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் வாகன பட்டியலை தமிழக பொலிஸார் வெளியிட்டு அவர்களை பிடிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இலங்கை வழியாக 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் ஊடுருவியிருக்கும் 6 பயங்கரவாதிகளும் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து கோவை முழுவதும் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டு, அதியுச்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொது இடங்கள் மற்றும் பதற்றமான இடங்களில் பொலிஸார் தொடர்ந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள், அவர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் வாகனங்கள் பட்டியலும் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வாகனங்கள் இன்னோவா, சைலோ, ஸ்விப்ட் ஆகிய வாகனங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை அடையாளமாகக் கொண்டு பயங்கரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- இந்திய ஊடகங்கள்
45 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
50 minute ago