2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பரணகம ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்கக் கோரிக்கை

Gavitha   / 2016 ஜனவரி 18 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் பரணகம ஆணைக்குழுவின் காலத்தை மேலும் நீடிக்குமாறு,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம், ஏற்கெனவே நான்கு தடவைகள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியுடன் அதன் கால எல்லை, மீண்டும் நிறைவடையவுள்ளது.

விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டிய தேவையுள்ளதால், அதன் காலத்தை நீடிக்கவேண்டிய தேவை உள்ளதென ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

யுத்தக் கால சம்பவங்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கட்டங்கட்டமாக பல முறை விசாரணை செய்யப்பட்டு அதன் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரியிடமும் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X