Janu / 2025 நவம்பர் 24 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மெத்திவ் ஜோன் டக்வர்த் (Matthew John Duckworth) , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பாராளுமன்ற வளாகத்தில் வைத்து வியாழக்கிழமை (20) அன்று சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் பற்றியும், இரு நாடுகளின் மக்களுக்கு இடையேயான உறவுகள் பற்றியும் கவனம் செலுத்திய பிரதமர், பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் பிராந்திய உரையாடலை மேலும் முன்னெடுத்துச் செல்வதில் இலங்கையின் ஆர்வம் குறித்தும் நினைவுபடுத்தியதுடன், பிராந்திய மற்றும் பல்தரப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
அத்தோடு, தொழில்சார் கல்வித் துறையின் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதின் அவசியம் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. தொழில்சார் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒழுங்குமுறை சட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவை கோரிய பிரதமர், தொழில்சார் கல்வித் துறையை பலப்படுத்துவதற்கான அறிவு, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் Matthew John Duckworth, முதல் செயலாளர் (அபிவிருத்தி) திருமதி. Zoe Kidd மற்றும் இலங்கை Austrade இன் கல்விப் பணிப்பாளர் Sandi Seneviratne,பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, கிழக்காசிய மற்றும் ஓசியானியா பிரிவின் பணிப்பாளர் Dhawood Amanullah, கிழக்காசிய மற்றும் ஓசியானியா பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திலோமா அபயஜீவ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

6 minute ago
13 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
39 minute ago