2024 ஜூன் 17, திங்கட்கிழமை

பிரான்ஸ் தூதுவரின் திடீர் மரணம் குறித்து இறுதி முடிவு?

Freelancer   / 2024 மே 27 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் மரணம் தொடர்பில் அவரது இறுதிக் கிரியைகள் இந்நாட்டில் நடைபெறுமா? அல்லது அவரது உடல் பிரான்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுமா? என்பது குறித்து இன்று (27) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என பிரான்ஸ் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean Francois Pactet  இராஜகிரியில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்த நிலையில், நேற்று பிற்பகல் வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது 56 ஆவது வயதில் பிரான்ஸ் தூதுவர் இவ்வாறு உயிரிழந்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X