2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பொரலஸ்கமுவ துப்பாக்கி சூடு ; சந்தேக நபர் கைது

Janu   / 2025 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள வீதியில் வைத்து  இருவர் மீது துப்பாக்கி சூடு மேற்​கொண்டு ஒருவரை கொன்ற சந்தேக நபர் 20 கிராம் ஹெராயினுடன், கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜிந்துபிட்டிய பகுதியைச் சேர்ந்த (24) வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

திட்டமிட்ட குற்றவாளியும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான படோவிட்ட அசங்கவின் முக்கிய கூட்டாளியான "தெஹிவல சாண்ட்ரோ" வழங்கிய ஒப்பந்தத்தின்படி, ஐந்து லட்சம் ரூபாய்க்கு குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டின் போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X