Editorial / 2025 ஜூலை 25 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}


அதி சொகுசு மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளரின் விளக்கமறியல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (25) பிறப்பித்துள்ளது,
ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளர், நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (25) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட 200 மில்லியன் ரூபாய்க்கு அதிக பெறுமதியான 21 மோட்டார் சைக்கிள்கள் அம்பலாந்தோட்டையில் வைத்து ஜூலை 12 ஆம் திகதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளர் கொழும்பு – நாரஹேன்பிட்டியவில் வைத்து ஜூலை 17 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
17 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
26 minute ago