2024 மே 01, புதன்கிழமை

பாலித தெவரப்பெருமவின் மரணத்திற்கான காரணம் வெளியானது

Freelancer   / 2024 ஏப்ரல் 17 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரம் தாக்கியதில் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதம் காரணமாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை நாகொடை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவின் பிரதம சட்ட வைத்திய அதிகாரி கே. எம். டி. பி. குணதிலக்க தலைமையில் வைத்தியசாலையின் சட்ட வைத்தியப் பிரிவில் பிரேத பரிசோதனை இன்று (17) நடைபெற்றது.

விபத்துக்குள்ளான இடத்தை நேற்று (16) களுத்துறை சட்ட வைத்திய அதிகாரி விசேட வைத்தியர் கலாநிதி கே. எம். டி. பி. குணதிலக்க அவதானித்த பின்னர், பிரேத பரிசோதனை இடம்பெற்றுள்ளது.

பின்னர், களுத்துறை குற்றத்தடுப்பு விசாரணை ஆய்வக அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை அவதானித்ததுடன், மத்துகம மேலதிக நீதவானும் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்.

பிரேத பரிசோதனைக்கு முன்னர், சடலத்தை களுத்துறை பிரதான நீதவான் நிதா ஹேமமாலி ஹல்பண்தெனியவும் பரிசோதனை செய்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில் அமைச்சரின் மனைவியிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டு களுத்துறையில் உள்ள மலர்ச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X