2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

பாலத்தில் தொங்கும் எருமைமாடு

Editorial   / 2025 டிசெம்பர் 14 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற எருமை மாடு ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் சிக்கி இறந்து இன்றும் தொங்கிக் கிடக்கிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு அங்கு ஏற்பட்ட பெருவெள்ளத்திலே இந்த மாடு சிக்குண்டு அள்ளுண்டு செல்லும் பொழுது புகையிரதம் செல்லும் மிக உயரத்தில் உள்ள ரயில்வே பாலத்தில் சிக்கி கொண்டிருந்தது.

நில மட்டத்தில் இருந்து இவ் ரயில்வே பாலம் சுமார் 30 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அங்கே மீள உதவியின்றி அது அந்த இடத்திலேயே இறந்திருக்கின்றது.

 அந்த மாடு இன்று வரைக்கும் அப்புறப்படுத்தப்படாமல்  அந்தரத்தில் பாலத்தில் தொங்கி கிடக்கின்றது. 

மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதான பாதையில் இந்த மன்னம்பிட்டி பாலம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X