2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பலப்பிட்டிய பகுதியில் இருவரை தனிமைப்படுத்த உத்தரவு

Editorial   / 2020 மார்ச் 28 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம-அட்டுலுகம பிரதேசத்துக்குச் சென்ற பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இருவரை தனிமைப்படுத்த வேண்டுமென, பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (28) உத்தரவிட்டுள்ளனர்.

பலப்பிட்டிய ரேவத சந்தி பகுதியைச் சேர்ந்த இருவரே,  அவர்கள்' வசிக்கும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பண்டாரகம-அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பலப்பிட்டிய பகுதியில் மாத்திரம் இதுவரை 185 பேர் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .