Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 செப்டெம்பர் 14 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளருக்கு 20 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவை அபதாரமாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணிக்கு 15 இலட்சம் ரூபாய் செலுத்துமாறும் அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்படும் என மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (12) அன்று தீர்ப்பளித்தார். .
மட்டக்களப்பில் இயங்கிவரும் நிதி நிறுவனம் ஒன்றில் உள்ள வெற்றிடத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவரை சம்பவ தினமான கடந்த 2019 செப்டம்பர் 4 நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்ட நிலையில்; நிதி நிறுவனத்திற்கு சென்ற பெண்ணை குறித்த நிதி முகாமையாளர் அங்கிருந்து வீடு ஒன்றுக்கு அழைத்து சென்று குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நிதி நிறுவன முகாமையாளரை கைது செய்தனர்.
இதனையடுத்து குறித்த நிதி முகாமையாளர் எதிராக பொலிஸார் வழக்கு தொடரப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்துள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்து கொண்ட போது குறித்த முகாமையாளருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சிகள் மற்றும் தடைய பொருட்கள் மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டார்.
எனவே குறித்த நபருக்கு ஒரு குற்றசாட்டுக்கு 5 இலட்சம் ரூபாய் வீதம் 3 குற்றச்சாட்டுகளுக்கும் 15 இலட்சம் ரூபாவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்குமாறும் அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை 20 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும்; 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணம் செலுத்துமாறும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
கனகராசா .சரவணன்
19 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago