2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் உத்தியோகத்தர் பணியிடை நீக்கம்

Freelancer   / 2025 டிசெம்பர் 23 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவினால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார தன்னைத் தாக்கியதாக சூரியகந்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், அவர் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் இவர் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்..

இந்நிலையில், அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள ஒழுக்காற்று விசாரணைகளை முன்னிட்டு, அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X