2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

பள்ளத்தில் பாய்ந்த கார்: 5 மாத குழந்தை பலி

Freelancer   / 2022 மே 08 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீர்த்தி பண்டாரபுர பொலிஸ் சோதனைச் சாவடி பகுதியில், காரொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஐந்து மாத குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (08) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் ஏழுவர் காயமடைந்து வலப்பனை பிரதேச வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியிலிருந்து அதிகாரகமை ஊடாக பதுளை நோக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேருடன் பயணித்த காரே விபத்துக்குள்ளாகியதுடன், வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வலப்பனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X