Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 14 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கன்னியாகுமரியின் கடற்கரை மணலில் காலடி பதித்து, கனவுகளைத் துரத்திய இளம்பெண் ஹேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பதினேழு வயதில், சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற பேராசை அவளது இதயத்தில் தீ மூட்டியிருந்தது.
அழகான முகமும், நடனத்தில் திறமையும் கொண்ட ஹேமா, கனவுகளை நனவாக்கும் பயணத்தில் ஒரு நடனப் பள்ளியில் காலடி எடுத்து வைத்தாள். அங்கே அவளுக்கு ஆசானாக அறிமுகமானவன் ராஜேஷ்.
ராஜேஷ், கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமான நடன ஆசிரியர். அவனது பள்ளியில் மாணவர்கள் நடனம் கற்று, மேடைகளில் பரிசுகளை அள்ளுவது வழக்கம்.
ஹேமாவின் ஆர்வத்தையும், சினிமா கனவையும் அறிந்த ராஜேஷ், அவளது மனதில் நம்பிக்கையின் விதைகளை விதைத்தான். "எனக்கு சினிமாவில் நிறைய துணை இயக்குனர்கள் தெரியும். அவர்கள் மனது வைத்தால், நீ நட்சத்திரமாகலாம்," என்று ஆசை வார்த்தைகளால் அவளை மயக்கினான்.
ஒரு மாலைப் பொழுதில், ராஜேஷ் ஹேமாவிடம் ஒரு வாய்ப்பைப் பற்றி பேசினான். "நாளை துணை இயக்குனர்களைச் சந்திக்க வேண்டும். அவர்கள் உன்னைப் பார்த்தால், சினிமாவில் இடம் கிடைக்கும்," என்று உற்சாகமூட்டினான்.
அவனது இனிமையான பேச்சும், அன்பான நடத்தையும் ஹேமாவின் மனதில் நம்பிக்கையை வளர்த்தன. "சரி, போகிறேன்," என்று ஒப்புக்கொண்டாள்.மறுநாள், ராஜேஷின் காரில் ஹேமா திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்திற்கு பயணித்தாள்.
கார் ஒரு அழகிய வீட்டின் முன் நின்றது. "இதுதான் இயக்குனர்களின் வீடு," என்று ராஜேஷ் கூற, ஹேமா உள்ளே நுழைந்தாள். அங்கே மூன்று இளைஞர்கள் அவளை வரவேற்றனர். முதலில் மரியாதையுடன் பேசிய அவர்கள், "ஆடிஷனை ஆரம்பிக்கலாமா?" என்று கேட்டனர்.
ஹேமாவின் மனதில் பயம் இல்லை; ஆர்வம் மட்டுமே நிறைந்திருந்தது. "ஆரம்பிக்கலாம்," என்று புன்னகையுடன் பதிலளித்தாள்.கேமராவை ஆன் செய்த இளைஞர்கள், "இது உண்மையான ஆடிஷன். சில காட்சிகளை நடித்துக் காட்டு," என்று கூறினர். ஹேமா தனது திறமையை வெளிப்படுத்தினாள். அவளது நடிப்பு அவர்களை மெய்மறக்க வைத்தது.
ஆனால், படிப்படியாக அவர்களின் உண்மையான முகம் வெளிப்பட்டது. "கிளாமர் காட்சிகளில் நடிக்க முடியுமா?" என்று கேட்டனர். "கண்டிப்பாக நடிப்பேன்," என்று உறுதியாகக் கூறினாள் ஹேமா. "முகபாவனைகளை மாற்றி நடி," என்று சொல்ல, அவள் அப்படியே செய்து அசத்தினாள்.பின்னர், அவர்களின் கோரிக்கைகள் வக்கிரமாக மாறின.
"பாவாடையை முட்டிக்கு மேல் தூக்கி காட்டு. குட்டியான ஆடை உனக்கு பொருந்துமா என்று பார்க்க வேண்டும்," என்று கேட்டனர். வெட்கத்துடன், ஆனால் நம்பிக்கையுடன், ஹேமா அதையும் செய்து காட்டினாள். அடுத்து, "படுக்கை அறை காட்சியில் நடிக்க முடியுமா? கற்பழிப்பு காட்சியில் தயக்கம் இருக்குமா?" என்று கேள்வி எழுப்பினர். "எந்தக் காட்சியாக இருந்தாலும் நடிப்பேன்," என்று துணிச்சலாகப் பதிலளித்தாள்.
உடனே அங்கிருந்த ஒரு இளைஞன் ஹேமாவின் அருகில் வந்து நின்றான், "இப்போது இவர் தான் ஹீரோவுடன் படுக்கை அறை காட்சி நடிக்க முடியுமா?" என்று கேட்டான்.
"சரி," என்று ஹேமா ஒப்புக்கொண்டவுடன், கேமரா ஆஃப் செய்யப்பட்டது. அந்த நொடியில், கனவுகள் கறையாகின. "படுக்கை அறை காட்சி" என்று சொல்லப்பட்டது, நிஜமாகவே ஒரு கொடூரமாக மாறியது. அந்த இளைஞன் ஹேமாவை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினான்.
அருகில் இருந்த ராஜேஷை பயம் கலந்த பதட்டத்துடன் பார்த்த ஹேமாவை கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ.. இவங்க மனசு வச்சா நீ பெரிய ஹீரோயின் ஆகாலாம் என்று கூற எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் படுத்திருந்தாள்.
அதனை தொடர்ந்து, மற்ற மூன்று இளைஞர்களும் அவளை இரண்டு நாட்கள் அந்த வீட்டில் அடைத்து வைத்து, மாறி மாறி கொடுமைப்படுத்தினர்."
கண்டிப்பாக உன்னை நடிகையாக்குவோம்," என்று ஏமாற்றி, இரண்டு நாட்களுக்குப் பின் ஹேமாவை வீட்டிற்கு அனுப்பினர். இதற்கிடையில், மகளை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்திருந்தனர் ஹேமாவின் பெற்றோர்.
இரண்டு நாள் கழித்து உடைந்த மனதுடன் வீடு திரும்பியவள், "கைபேசி உடைந்துவிட்டது, அதனால் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை," என்று பொய் சொன்னாள். அவளது பெற்றோர், மகள் திரும்பியவுடன் காவல்நிலையத்தில் அளித்த புகாரை வாபஸ் பெற்றனர். ஆனால், உண்மை மறைந்து நிற்கவில்லை. நான்கு மாதங்களுக்குப் பின், ஹேமாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பதினேழு வயது மாணவி என்பதால், மருத்துவமனை காவல்துறைக்கு தகவல் அளித்தது.
விசாரணையில், ஹேமா தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கண்ணீருடன் விவரித்தாள். உடனடியாக, ராஜேஷ் கைது செய்யப்பட்டு, POCSO சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டான். மற்ற மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.
ஹேமாவின் கனவு, ஒரு கொடூரமாக மாறிய இந்த சம்பவம், கன்னியாகுமரி மாவட்டத்தை உலுக்கியது. ஒரு இளம்பெண்ணின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, அவளது வாழ்க்கையை இருளாக்கியவர்கள் இப்போது சட்டத்தின் பிடியில்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago