2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பஸ்ஸில் அதிக பணம் கேட்டால் அழைக்கவும்

Freelancer   / 2022 ஜனவரி 05 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிக கட்டணம் அறவிடும் பஸ்களின் வழித்தட அனுமதியை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிடுவது தொடர்பான முறைப்பாடுகளுக்கு 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (05) முதல் பஸ் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஊடகங்கள் பிரசாரம் செய்துள்ளதாகவும், அதற்கு மேல் கட்டணம் அறவிடும் பஸ்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் வெல்கம மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .