2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பாடசாலைகளுக்கு நத்தார் விடுமுறை

Editorial   / 2025 டிசெம்பர் 16 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை அனர்த்தங்களுக்கு பின்னர் பல  பாடசாலைகள் இன்று (16) கல்வி நடவடிக்கைகளுக்கான இன்று (16) திறக்கப்பட்டன. 

இந்நிலையில், இந்த கல்வி நடவடிக்கை 19 ஆம் திகதி வரையிலும் தொடரும். அத்துடன், நத்தார் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மீண்டும் மூடப்பட்டு 29 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை,  இடைநிறுத்தப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீள நடத்தப்படும் 2026 ஜனவரி மாதத்தில்   அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

 அத்துடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையை கருத்திற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகள் மூடப்படவுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X