Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவர்களுக்கு 2020ஆம் கல்வியாண்டுக்கு தேவையான பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும் போது சகல மாணவர்களுக்கும் பாடநூல்களை விநியோகிக்கப்படும் என, அந்த அமைச்சு கூறியுள்ளது.
எஞ்சிய பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் கல்வியமைச்சின் வெளியீட்டு ஆணையாளர் நாயகம் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
பாடநூல்களை விநியோகிக்கும் நடவடிக்கை சகல மாகாணங்களை உள்ளடங்கிய வகையில் இடம்பெறுகிறது.
500 முதல் 1000 வரையான மற்றும் அதற்கு அதிகமான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கான பாடநூல்களை விநியோகிக்கும் பணி திணைக்களத்தினால் நேரடியாக மேற்கொள்ளப்படவுள்ளது.
ஏனைய பாடசாலைகளுக்கு வலய கல்வி காரியாலங்கள் ஊடாக பாடநூல்களை விநியோகிக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago
03 Jul 2025