2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிக்க நடவடிக்கை

Editorial   / 2019 டிசெம்பர் 16 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப் பொருளை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

வெயாங்கொடவில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், பாதுகாப்பு செயலாளராக பணியாற்றும் பொழுது முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் முன்மாதிரியான நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு தான் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.

நாட்டு மக்களுக்கு பெரும் தலையிடியாக அமைந்துள்ள பாதாள உலகக்குழுக்கள் மற்றும் போதைப் பொருளை இல்லாதொழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .