Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Simrith / 2024 டிசெம்பர் 15 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில பட்டங்கள் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்ற இணையதளத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களின் தகவல்களையும் மீண்டும் சரிபார்த்து புதுப்பிக்கும் செயல்முறை நடந்து வருகிறது.
இணையத்தில் தகவல்களைப் புதுப்பிக்கும் பொறுப்பில் உள்ளவர்களிடம் விளக்கம் கேட்கவும் பாராளுமன்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதேவேளை, பாராளுமன்ற இணையத்தளத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் கோப்பகத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்பாக கலாநிதி என்ற தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்திற்கு வழங்கிய தகவல்களில் ஹர்ஷன நாணயக்கார கலாநிதி பட்டம் பெற்றுள்ளதாக குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரின் பெயருக்கு முன்னால் குறித்த பட்டம் காட்சிப்படுத்தப்பட்டமையானது, தொடர்புடைய தரவை உள்ளிடுவதில் ஏற்பட்ட தவறுதலின் விளைவாகும். அதன்படி, இந்த தவறை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago