2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பாராளுமன்றத்துக்கு வந்த நாகபாம்பு

Editorial   / 2025 செப்டெம்பர் 17 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற வளாகத்தின் போக்குவரத்து அலுவலகம் அருகே ஒரு நாகப்பாம்பு காணப்பட்டது, இதனால் கடந்த வாரம் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது.

பாராளுமன்றத்தின் உதவி இயக்குநர் (நிதி) ரோஹித பத்மசிறி முதலில் அந்த நாகப்பாம்பைக் கண்டார்.

அன்று மாலை பணியில் இருந்த அவர், நாகப்பாம்பைக் கண்டதும் உடனடியாக பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார்.

அதன்படி, அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் நாகப்பாம்பைப் பிடித்து காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று வீசியதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

தியவன்னாவ நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள காட்டில் இருந்து பல்வேறு வகையான நாகப்பாம்புகள், விரியன் பாம்புகள் உட்பட பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து நீண்ட நாட்களாகிவிட்டன. முன்னதாக, பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த பல பாம்புகளைப் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து வனப்பகுதிகளுக்கு எடுத்துச் சென்று வீசினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X