Kogilavani / 2021 மே 23 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
அக்கரப்பத்தனை டயகம அரச பாற்பண்ணையில் பணியாற்றும் 37 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (23) உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படிப் பண்ணையில் முதலில் ஆறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, அவர்களுடன் தொடர்பைப் பேணிய 91 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே மேலும் 37 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படிப் பாற்பண்ணைக்கு அருகில் டயகம சந்திரிகம தோட்டம் காணப்படுவதுடன், அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த மூவர், பாற் பண்ணையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கும் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணரத்ன தெரிவித்தார்.
மேற்படிப் பாற்பண்ணையில் சுமார் 700 மாடுகள் காணப்படுகின்றன என்றும் அந்த மாடுகளைக் கருத்திற்கொண்டு அருகிலுள்ள பாற் பண்ணைகளிலிருந்து ஊழியர்களை வரவழைப்பதுத் தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் பாற்பண்ணையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாற் பண்ணை மற்றும் சந்திரிகாமம் தோட்டம் என்பவற்றை மறுஅறிவித்தல்வரை முடக்குவதுத் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
லிந்துலை பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள் இன்று (23) பாற்பண்ணைக்குச் சென்றுள்ளதுடன் நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

24 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
2 hours ago