2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘பாவங்களை மறைப்பதற்கு அவசியமில்லை’

Editorial   / 2019 ஜனவரி 01 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத்தினருக்கும் தனக்கும் பாவங்களை மறைப்பதற்கான அவசியம் இல்லையெனவும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தாம் போராடியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தங்காலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் கூறுவதைப் போன்று பாவங்களை மறைப்பதற்கான எவ்வித தேவையும் தனக்கும் இராணுவத்தினருக்கும் இல்லையென்பதைத் தெளிவாகக் கூற வேண்டு​ம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் நாட்டுக்காகவும் இனத்துக்காகவும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடியதாகத் தெரிவித்த அவர் தீவிரவாதத்துக்கு எதிராக​வே தாம் போரிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அன்று தீவிரவாதத்துக்கு துணைப் போனவர்களுக்கு இன்று அனைத்து இராணுவ அதிகாரிகளும் தவறாகத் தான் தெரிவார்களென்றும் இவ்வாறு தாம் தெரிவிப்பது தொடர்பில் கவலையடைவதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டின் நிலைக் குறித்து மக்கள் சரியான தீர்வினை வழங்குவர். ஏனெனில் மக்களுக்குத் தெரியும் இந்த அரசாங்கத்தால் முடியாதென்று. எனவே எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிப்பெற நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .